விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் காமராஜர் நகர் பகுதியில் அதிகாலை வீடு மற்றும் கறிக்கடைக்குள் டிப்பர் லாரி புகுந்ததில் சம்பவ இடத்தில் காமராஜர் நகரை சேர்ந்த பொன்னையா சுந்தரராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இருவர் உயிரிழந்தனர்.

மணிமாறன் என்பவர் காயம் அடைந்து ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு உரிய நிவாரண வழங்க கோரி இராஜபாளையம் தென்காசி சாலையில் சேத்தூர் புறக்காவல் நிலையம் கிருஷ்ணாபுரம் பகுதியில் இறந்த ஆகாஷின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி சேத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உயிரிழந்த 16 வயது சிறுவன் ஆகாஷ் குடும்பத்திற்கு 5 லட்சம் சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்த பொன்னையன் வயது 70 என்பவருக்கு 3 லட்சம் ரூபாயும் காயம் அடைந்த மணிமாறனுக்கு 2 லட்சம் ரூபாய் என நிதி உதவி கொடுப்பதாக சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர் காமராஜன் உறுதி அளித்து பணம் கொடுத்த பின்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
