• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

ByK Kaliraj

Sep 28, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் நுகர்வோர் சங்கம் சார்பாக இளங்கலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ‌
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். இளங்கலை மூன்றாம் ஆண்டு வணிக கணினி துறை மாணவி பிரபா வரவேற்று பேசினார்.

திருத்தங்கல் போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பான சாலை விதிமுறைகள் குறித்து மாணவர்களிடையே விளக்கி கூறினார். மோட்டார் சைக்கிள்களை வேகமாகவும், அதிவேகமாக ஓட்டுவது குறித்தும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும்,தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தி பேசினார்.

சிவகாசி நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், கல்லூரி நுகர்வோர் மன்றத்தின் முயற்சிகளை பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் 1200 மாணவ, மாணவிகள், கலந்துகொண்டனர்.

உதவி பேராசிரியரும், சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் மாரியப்பன் நன்றி கூறினார்.