விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொங்கலாபுரம் கிராமத்தில் எண்ணூருக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிரமத்தில் பல ஆண்டுகளாக மேல்நிலைத் தொட்டி கட்டப்படவில்லை. இதனால் இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள சித்துராஜபுரத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சென்று தண்ணீர் எடுத்த வர வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது.
தண்ணீர் எடுக்க முடியாதவர்கள் தனியார் குடிநீர் வாகனங்களில் ஒரு குடம் 15 ரூபாய்க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் நடுத்தர ஏழை மக்களுக்கு. பெரும்பாலான செலவாக குடிநீர் இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியை சேர்ந்த மக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்படுவதால் உடனடியாக போர்வெல் அமைத்து மேல்நிலைத் தொட்டி மற்றும் தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியின் மூலம் குடிநீர் சப்ளை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை . இந்நிலையில் செவல்பட்டியில் இருந்து சிவகாசிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய் சென்று வருகிறது. குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக வெளியேறும் தண்ணீரை இப்பகுதியை சேர்ந்த மக்கள் நீண்ட நேரம் சிறிது, சிறிதாக சேகரித்து குடங்களில் கொண்டு செல்ல வேண்டிய அவல் நிலை இருந்து வருகிறது. ஆகையால் குடிநீர் வசதி செய்து தரவும் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
