விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தில் சின்னச்சாமி வயது 68 பட்டாசு ஆலையில் காவலாளியாக பணியாற்றி வருகிறார் .
கடந்த வாரம் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் காணவில்லை இதுகுறித்து மனைவி சுந்தரம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தொடர்ந்து தேடி வந்த நிலையில் கணஞ்சாம்பட்டி பட்டாசு குடோன் பின்புறம் உள்ள ஓடையில் துர்நாற்றம் வீசுவாதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெம்பக்கோட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் பிணம் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் இறந்தவர் உடல் அருகில் வேட்டி இருந்ததால் காணாமல் போனவர் சின்னச்சாமிதான் என்பது குடும்பத்தினர் அடையாளம் காட்டினார். ஒரு வாரமாக தேடி வந்த நிலையில் காணாமல் போனவர் இறந்த நிலையில் கிடந்ததால் குடும்பத்தினர் கொலையா அல்லது விபத்தா என தெரியாமல்அதிர்ச்சி அடைந்தனர்.