விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மடத்துபட்டியில் ஆநிரை கண்ணன் திருக்கோவில் உள்ளது.
புரட்டாசி திருவிழா ஆநிரை கண்ணன் கோவிலில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாளில் கண்ணன் கோவில் வளாகத்தில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாளில் பக்தர்கள் பஜனை பாடல்கள் அதனைத் தொடர்ந்து கும்மி பாட்டு நடைபெற்றது. ஆநிரை கண்ணனை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா உற்சவ நிகழ்ச்சி முக்கிய வீதியின் வழியாக நடைபெற்றது.
சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோவில் நிர்வாக கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.