2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த ஏற்படுத்திய தாக்கத்தை விட விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார்.
செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம், கேம்ப் ரோட்டில், தனியார் திருமண மண்டபத்தில், தாம்பரம் சட்டமன்ற தொகுதி அமமுக
செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் டிடிவி தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளிடம் பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்:-
வருகிற தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அமமுக தேர்தலை நோக்கி தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறோம். டிசம்பர் மாதம் தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்கும்.
கூட்டணி குறித்த கேட்டதற்கு:- எனக்கு தெரிந்த வரை ஆளும் கட்சி திமுக கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி, விஜய் தலைமையில் கூட்டணி, சீமான் தலைமையில் ஒரு கூட்டணி நான்கு கூட்டணி வர இருக்கிறது.
அமமுக கூட்டணி நிலைப்பாட்டை டிசம்பர் மாதம் தெரிவிப்பதாக கூறினார்.
எனக்கும் பாஜகவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக அறிவித்ததை ஏற்று கொள்ள முடியாது என்ற காரணத்தினால் தான் செப்டம்பரில் கூட்டணியில் இருந்து வெளியில் வந்தோம்.
2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த ஏற்படுத்திய தாக்கத்தை விட விஜய் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துவார்.

விஜயகாந்த் வருகையால் திமுகவும், அதிமுகவும் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பாதித்தது.
செங்கோட்டையனிடம் அடிக்கடி பேசுவேன் இன்று கூட செல்போனில் பேசினேன்.
அது அதிமுக கூட கிடையாது எடப்பாடி திராவிட முன்னேற்ற கழகம்,
புரட்சி தலைவர் ஆரம்பித்த இயக்கத்தின் அடிப்படை சிறப்பான சட்டதிட்டமே பொதுச் செயலாளர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், பழனிச்சாமி கைகரியத்தால் வேறு எந்த கட்சியிலும் இல்லாத சிறப்பு விதியாக அடிப்படை உறுப்பினர்கள் பொதுச் செயலாளர்களை தேர்தெடுக்க வேண்டும் என்பதற்கு காரணமே புரட்சித் தலைவரை திமுகவில் இருந்து நீக்கியதால் அந்த வலியின் காரணமாக கட்சியை ஆரம்பித்து விதியை கொண்டு வந்தார்.
தேர்தல் முடிந்த பிறகு பழனிச்சாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கு முடிவுரை எழுதப்பட்டு அம்மாவின் தொண்டர்கள் பழைய அதிமுகவை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.