தூய்மை பாரத இயக்கம் மற்றும் கழிவு சேகரிப்பு இயக்கம் சார்பில் ஊரகப் பகுதிகளில் தூய்மை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊஞ்சாம்பட்டி கிராம பகுதிகளில் உள்ள கழிவுகள் சேகரிக்கப்பட்டு தூய்மை மேற்கொள்ளும் பணி நடைபெற்றது.

சாலையோரம் இருக்கிற குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் கலந்துகொண்டு கிராம பகுதிகளில் மேற்கொண்டு வரும் இந்த தூய்மை பணியினை பார்வையிட்டு அலுவலர்களுடன் தூய்மை பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பொதுமக்கள் குப்பைகள் போடுவதற்கு ஊராட்சி பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா, சேகரிக்கப்படும் குப்பைகள் அகற்றி குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.