விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு கலந்து கொண்டார்.

முகாமில் அமைச்சர் வருவது தெரிந்து பந்தல்குடி பள்ளி மாணவ மாணவிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு விடம் சென்று மதுரை – தூத்துக்குடி செல்லும் பேருந்துகள் பந்தல்குடியில் நிற்பதில்லை. இதனால் பள்ளிக்கு செல்ல தாமதமாகிறது. பொதுமக்களும் தினந்தோறும் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்படுகின்றனர். ஆகையால் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்..
இதனையடுத்து உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு போன் செய்து பந்தல்குடியில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.
கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்ததற்கு பள்ளி மாணவ மாணவிகள் அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நன்றி தெரிவித்தனர்.