விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்,
எம்ஜிஆரின் புகைப்படத்தைச பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே

புதிதாக வரும் கட்சிகள் எம்ஜிஆரின் புகைப்படத்தை பயன்படுத்தி அவரது புகழை தங்களுக்காக திருட பார்க்கிறார்கள் என விஜய் மீது குற்றச்சாட்டு,
எம்ஜிஆரின் புகழும் பெருமையும் அதிமுகவிற்கே சொந்தம் நடிகர்கள், திரை நட்சத்திரங்கள் யார் வந்தாலும் அவர்களை பார்க்க பெரும் கூட்டம் கூடும் விஜய்க்கு கூடும் கூட்டம் கட்டுக்கோப்பான கூட்டம் அல்ல காட்டாறு போல ஓடும் கூட்டம்
விஜய்க்கு வரும் கூட்டம் ஒட்டாக மாற வாய்ப்பே இல்லை
விஜய் தலைமையில் மூன்றாவது அணி அமையலாம், ஆனால் அந்த கூட்டணி வெல்வதற்கான வாய்ப்பு உறுதியாக கிடையாது
களத்தில் அதிமுக – திமுக மட்டுமே

எம்ஜிஆர் கட்சி துவங்கியதையும் விஜய் கட்சி துவங்கியதும் ஒப்பிட்டு பார்ப்பது தவறு
எம்ஜிஆர் பலகட்ட மக்கள் பணியை மேற்கொண்ட பின்னரே கட்சியை துவக்கினார், இரண்டு மாதத்தில் கட்சியை துவங்கவில்லை
அதிமுகவினர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் நடத்தும் மாநாடுகளை தினமும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வாரத்திற்கு ஒரு நாள் மக்களை சந்தித்து ஒட்டுமொத்த மக்களையும் ஒன்று திரட்டி அத்துமீறு, அடங்கமறு, போன்ற அநாகாரியமான அரசியல் நிலைப்பாடாக மக்கள் பார்க்கிறார்கள்.
தவெகவினரால் ஒரு இயக்கத்தை நடத்தக்கூடிய திறமை கிடையாது
ஏதோ வந்தார்கள், ஆட்டம் போட்டார்கள் சென்றார்கள் என்ற அரசியல் வாழ்வு இருக்கும் வென்றார்கள் வாழ்ந்தார்கள் என்ற நிலைப்பாடு இருக்கமுடியாது.
விஜய் இடத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள் ஆனால் படை வீரர்களும், படைத்தளபதியும் இல்லை

இயக்கத்தை கட்டுக்கோப்பாக கொண்டு செல்லும் அளவிற்கு பக்குவம் இல்லை, பாடசாலையும் இல்லை ஆகவே அதனை படித்து பக்குவப்பட்டு பல களங்கள் கண்டு அதற்கு பின்புதான் தேர்தலில் வெல்வார்களா? வீழ்வார்களா? என்பது தெரியவரும்.
விஜய் தலைமையில் மூன்றாவது அணி அமைந்தால் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்.
எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும் என அவரை ஏற்று கொண்டவர்களால் மிகப்பெரிய அணி உருவாகியுள்ளது
அதிமுகவில் யார் யாரை சேர்க்க வேண்டும், யாரை சேர்க்கக்கூடாது யார் ஒற்றைக் கருத்து உடையவர்கள் யாரால் இயக்கத்திற்கு லாபம் என்பதை கணக்கு போட்டு சேர்க்கும் இடத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.
அதிமுக பாஜக கூட்டணியை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமி சொல்வது தான் வேதவாக்கு, வேறு யாரு கருத்து சொன்னாலும் அது பொருட்படுத்தப்பட மாட்டாது
திமுகவை வெல்ல அதிமுக ஒன்றிணை வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்திற்கு பதில்
எடப்பாடி பழனிச்சாமி சொல்வதைத்தான் இரண்டு கோடி தொண்டர்களும் கேட்பார்கள் எடப்பாடி பழனிச்சாமி எடுக்கும் முடிவு தான் இறுதி முடிவு
வெற்றியை நோக்கி காய்களை நகர்த்தக்கூடிய திறமையும் பண்பும் கொண்டவராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் அதிமுக கூட்டணி தான் வெல்லும், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவார்