தென்மாவட்ட முட்டை வியாபாரிகள் நல சங்கம் சார்பில் தேனியில் முட்டை விற்பனையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனியைச் சேர்ந்த முட்டை விற்பனை செய்யும் சில்லறை, மொத்த விற்பனை வியாபாரிகள் கலந்து கொண்டு தொழில் வளர்ச்சி குறித்து ஆலோசனைக் நடத்தினர்.
முட்டை பண்ணையாளர்கள் முறையாற்ற விலை நிர்ணயிப்பதால் சில்லரை மற்றும் மொத்த முட்டை விற்பனை செய்யும் தொழில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு முறையான விலை கிடைக்காமல் முட்டை தொழில் நலிவடைந்து சென்று வருவதாகவும் இதனால் முட்டை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முட்டை வியாபாரிகள் ஒருங்கிணைந்து தங்களுக்கு உண்டான விலை நிர்ணயம் செய்து மக்களுக்கு சரியான விலையில் முட்டை விற்பனை செய்யும் நோக்கில் இந்த கூட்டம் நடைபெற்றது என தெரிவித்தனர்.
முட்டை வியாபாரிகளின் வாழ்வாதார கருதி தமிழக அரசு முறையான விலை நிர்ணயம் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.