சுதந்திர போராட்ட வீரர், சமூக நீதிப்போராளி, தியாகி: இம்மானுவேல் சேகரன்* அவர்களின்… 68வது குருபூஜை விழா சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய பொட்டல்பட்டி கிராமத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமன கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு தியாகி: இம்மானுவேல் சேகரன் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்க மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பு நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.