விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொம்மாங்கிபுரம் ஊராட்சியை சேர்ந்த புல்ல கவுண்டன்பட்டி, சிப்பிப்பாறை, வால்சாபுரம், கொடப்பாறை,மேட்டுப்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெட்டிவேர் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சொட்டு நீர் பாசனத்தில் வெட்டிவேர் பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டு ஒரு ஆண்டுக்குப் பிறகு முழு பலனை தரக் கூடியது. இதனை பராமரிப்பது எளிது. தண்ணீரும் சிக்கனமாக பயன்படுத்தப்படுகிறது .நோய் தாக்குதலும் குறைவு என்பதால் இப்பகுதியில் வெட்டிவேர் தொடர்ந்து பயிரிடப்பட்டு வருகிறது. வற்றாத தாவரவகையை சேர்ந்தது .இதனை வாசனை திரவியங்கள் தயாரிக்கவும், மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இது குறித்து புல்ல கவுண்டன்பட்டி விவசாயி முத்து கூறியது
சொட்டு நீர் பாசனத்தில் வெட்டிவேர் பயிரிடப்பட்டுள்ளது. வெட்டிவேர் குறைந்த அளவு தண்ணீரே பயன்படுத்தினால் போதும்.. பயிர்களில் குறைந்த அளவு களையே வரும் அதனை உடனுக்குடன் அகற்றப்படும். இதற்காக சம்பளத்திற்கு கூலி ஆட்களை நியமனம் செய்ய வேண்டியதில்லை. வீட்டில் உள்ள குடும்பத்தினரை இதனை நன்கு கவனிக்க முடியும். வெட்டிவேர் அறுவடை செய்து நன்கு காயவைத்து விற்பனைக்கு தயாரான நிலையில் வியாபாரிகளே நேரடியாக வந்து வாங்கி சென்று விடுவார்கள்.பயிரிடப்பட்ட ஒரு ஆண்டுகளுக்கு பிறகு அறுவடை செய்யப்படும். கிலோ 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை கிடைப்பதால் லாபம் கிடைப்பதாக கூறினார்