தென் தமிழகத்தில் மன்னர் ஆட்சி காலத்தில். மக்கள் மீது மன்னரது அடக்குமுறைக்கு எதிராக முத்துக்குட்டி என்ற வைகுண்டர் தோற்றுவித்த, புதிய வழிபாட்டு முறை என்பதை இங்கு வந்து குரு பால பிரஜாபதி சந்திப்பின் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

சீக்கிய மத 7_வது குரு எதோ ஒரு காலத்தில் தமிழகம் பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கன்னியாகுமரி வந்த சீக்கிய குரு சாமிதோப்பு வந்ததை எங்கள் குருக்கள் பின் வந்த குருக்களுக்கு ஒரு தகவலாக சொல்லியது என் நினைவில் இருக்கிறது.

இலங்கை மற்றும் தூத்துக்குடி பகுதியில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், இன்று சாமிதோப்பு வந்து பூஜித குரு பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து
பேசும் வாய்ப்பு கிட்டியது.புனித முந்திரி கிணற்றை பார்த்தேன். சீக்கிய மத வழிபாட்டின் பல்வேறு கூறுகள், அய்யா வழியிலும் இருப்பதை மானசீகமாக என்னால் உணர முடிந்தது.
நாங்கள் தலையில் அணியும் ‘டர்பன்’ எவ்வளவு புனிதமானதோ,அதே புனிதத்தை அய்யா வழியிலும் தலைப்பாகை அணிவதில் உள்ள ஒர் கலாச்சார ஒற்றுமையை காண்கிறோம்.

அய்யா வழி பூஜித குருக்கள் அந்த காலத்தில் ஒரு வாளுடன் இருக்கும் புகைப்படங்கள் பல வற்றை இன்று நான் காணும் வாய்ப்பை பெற்றேன். அந்த முன்னோர்கள் பின் பற்றிய வாளுடன் வாழும் வாய்ப்பை பூஜித குரு பால பிரஜாபதி அவர்கள் மூலம் மீண்டும் தொடர வேண்டும் என ஆசைப்படுகிறோம். எதிர் வரும் நவம்பர் மாதம் பிற்பகுதியில் குரு பால பிரஜாபதியை அமிர்தசரஸ்க்கு சிறப்பு விருந்தினராக அழைக்க உள்ளோம் அப்போது. சீக்கிய குருக்களின் பாரம்பரிய உடை வாளை உடன் அணித்துக் கொள்ள செய்யவுள்ளோம்.

தமிழக அரசின் பொதுதேர்வாணையம் அண்மையில் நடத்திய பரிட்சையில் கேட்கப்பட்ட கேள்வியில். முடிசூடும் பெருமாள் என்பதை கீரிடம் சூடிய என தமிழ் மொழிப்படுத்தியிருக்கலாம்,அதை விடுத்து முடி வெட்டும் என்ற வார்த்தை அநாகரிகமாக உள்ளது.
தமிழக அரசு இத்தகைய அநாகரீக மான வார்த்தையை பயன் படுத்திய தேர்வு துறை உறுப்பினர் மீது உகந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என தெரிவித்தார்.