மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:

அதிமுக ஒன்றிணைைய வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் எந்த ரூபத்தில் எப்படி வந்தாலும் நான் முழு மனதுடன் வரவேற்கிறேன் அதற்கு முழு ஒத்துழைப்பும் தருவேன்.
ஒன்றிணைந்தால் தான் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற கேள்விக்கு:
உங்களுடைய கருத்து வரவேற்கக் கூடியது அதுதான் நடக்கும் ஒன்று அணிய வேண்டும் என்கிற எண்ணம் அனைவரின் மனதிலும் உள்ளது ஒன்று அணிய வேண்டும் அப்படி ஒன்றிணைந்தால் தான் புரட்சித் தலைவர், புரட்சித்தலைவியின் எண்ணம் நிறைவேறும்.
ஒன்று நீர் இபிஎஸ் மாறுபடுவதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு:
நீங்கள் தயவு செய்து என்னை கேட்பதை விட்டுவிட்டு அவரை கேளுங்கள். இபிஎஸ்ஐ தவிர முதல்வர் வேட்பாளராக யாரை அறிவித்தாலும் நான் கூட்டணிக்குள் வருவேன் என டிடிவி கூறியது குறித்த கேள்விக்கு:
ஆழமான கருத்து, சத்தான கருத்து. என்னைப் பொறுத்தவரை கட்சி இணைவது குறித்து நான் எந்த வித டிமாண்டும் வைக்கவில்லை.
இந்திய கூட்டணியில் மீண்டும் இணைய எதுவும் கோரிக்கை உள்ளதா என்ற கேள்விக்கு:
நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஒன்றிணையை ஈபிஎஸ் ஒப்புக்கொண்டால் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு:

அதில் பேச வேண்டிய பல பிரச்சனைகள் உள்ளது ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. எங்கள் தர்ம யுத்தத்தின் அடிப்படையில் அந்த வழக்குகள் உள்ளது. அது நிறைவேறும் பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம்.
செங்கோட்டையனின் முயற்சி வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு:
என்னைப் பொருத்தவரை அவர் எடுத்திருக்கும் முயற்சி உறுதியாக வெற்றி பெறும் அதற்கு எனது வாழ்த்துக்கள்.
டெல்லியில் இருந்து அழைப்பு வந்துள்ளதா என்ற கேள்விக்கு:
இதுவரை இல்லை. அதிமுகவை துண்டாக்கி விளையாடுவது பாஜக ரசிக்கிறதா என்ற கேள்விக்கு:
நான் அப்படி எண்ணவில்லை. வர தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு:
உடனுக்குடன் கருத்துக்கணிப்பு வெளியிட்டு கோட்பாடுகளை கேட்டால் எப்படி சொல்வது பொறுத்திருந்து பாருங்கள் தேர்தல் வர வர எண்ணங்கள் நிறைவேறும்.
தினந்தோறும் மக்களை சந்திக்கிறேன். செங்கோட்டையிடம் அலைபேசி மூலமாக பேசினீர்களா என்ற கேள்விக்கு: டெய்லி பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் எனops கூறினார்.