• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சிறப்பு பள்ளிமாணவர்களுக்கு பயிற்சி கருவி வழங்கல்.

கன்னியாகுமரி திமுக சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் எச்.எம். நிசார் அவரது சொந்த செலவில். கன்னியாகுமரி உள்ள அவிலா சிறப்பு பள்ளியில் பயிலும் ஊனம் உற்ற மாணவர்களின்,உடல் பயிற்சி கருவி வழங்கும் நிகழ்வில்.

குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் நிகழ்வில் பங்கேற்று உடற் பயிற்சி கருவியை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரியிடம்
வழங்கினார்.

பள்ளியில் தங்கி பயிலும் 80_க்கும் அதிகமான மாணவர்களுக்கு மதிய
உணவை பரிமாறி தொடங்கி வைத்தார். திமுகவின் மாநில சிறுபான்மை துணை தலைவர் ஜேசப்ராஜ். நிகழ்விற்கு தலைமை தாங்கினார். அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, நிகழ்வில் பங்கேற்ற. கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் வாழ்த்திப் பேசினார்.

நிகழ்வில் முன்னாள் வார்ட் உறுப்பினர் தாமஸ்,தற்போதைய வார்ட் உறுப்பினர்கள், திமுக கட்சியின் பல்வேறு பொருப்பாளர்கள் பங்கேற்றார்கள்.