• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

திருப்பதியில் மூன்றாவது மலைப்பாதை

Byமதி

Dec 13, 2021

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மூன்றாவது மலைப்பாதை ஒரு சில வாரங்களுக்குள் உருவாக்கப்படும் என தேவஸ்தான உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி, “கடப்பாவை திருமலை மலையுடன் இணைக்கும் வகையில் அடர்ந்த வனப்பகுதி வழியாக நடைபாதை இருந்ததை, இப்போது சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளோம்.

இது தவிர தற்போது உள்ள இரு பாதைகளும் அண்மையில் பெய்த பலத்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதை சீரமைக்கவுள்ளோம். இதற்காக 3 கோடியே 95 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 3 வாரங்களுக்குள் பணி முடிவடையும்” என்று அவர் கூறினார்.