• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி அருகே கார் விபத்தில் கணவன், மனைவி பலி

ByP.Thangapandi

Sep 10, 2025

உசிலம்பட்டி அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி பலி – மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் சிவகாசியிலிருந்து தேனி நோக்கி சென்ற கார் ஒன்று அதிகாலை 2 மணியளவில் சாலையோர புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது., இதில் காரில் பயணித்த கடமலைக்குண்டு காவேரி தோட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன், மாயக்கிருஷ்ணம்மாள் என்ற கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.,
மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த சுருளியம்மாள், விஜயபாரதி, சித்ரா, ஷர்வீன், அசோக்குமார் என்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கா.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.,
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் விபத்தில் உயிரிழந்த கணவன் மனைவி உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்பத்தினர் அனைவரும் விபத்தில் உயிரிழந்த கணவன் மனைவியின் மகளை சிவகாசிக்கு சென்று பார்த்துவிட்டு சொந்த ஊரான கடமலைக்குண்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது அதிகாலை வேளையில் கார் ஓட்டுநர் தூக்கத்தில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.,
சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,