சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரம் மலங்கானந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள, புனித ஆரோக்கிய அன்னை குருசடியின் ஐந்தாம் ஆண்டு தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழாவினை முன்னிட்டு அன்னையின் திருக்கொடி ஏற்றப்பட்டு, தொடர்ந்து மூன்று நாட்கள் நவநாள் ஜெபமாலை வழிபாடு நடைபெற்றது. விழா நாளன்று அன்னையின் திருவுருவ சுரூபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அப்பகுதியை சுற்றி பவனியாக வலம் வந்ததும் வழிநெடுங்கிலும் மக்கள் மெழுகுதிரி ஏந்தி தூபமிட்டும், மலர் மாலைகள் அணிவித்தும் அன்னையை பக்தியுடன் வழிபட்டனர்.
விழாவையொட்டி அன்னை தெரசா அறக்கட்டளை ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில், அப்பகுதி மாணவர்களுக்கு ஸ்கூல் பேக், டிபன்பாக்ஸ், நடக்க இயலாதவருக்கு சக்கர நாற்காலி, ஊன்று கோல்கள், மற்றும் எளியோருக்கு புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், பொது மக்களுக்கு தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் சிறப்பு அழைப்பாளர்களாக மாமன்ற உறுப்பினர்கள் டி.வி. ராஜா எனும் இராஜேந்திரன், கிச்சா எனும் கிருஷ்ணமூர்த்தி, மதிமுக மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன், அஸ்தினாபுரம் பகுதி அதிமுக செயலாளர் அருணாசலம், தொழிலதிபர் பல்லாவரம் பா.கெளதம், தொழிலதிபர் அஸ்தினாபுரம் விஜயநாராயணன், மருத்துவர் பிரகாஷ், மார்ட்டின், கனகராஜ், அதிமுக வட்டசெயலாளர் குன்றத்தூர் சுரேஷ் மற்றும் அன்னை தெரேசா அறக்கட்டளையினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.