• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவி காதலனுடன் தூக்கிட்டு தற்கொலை ..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே (தொம்பகுளம்) கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் ஆகாஷ் (22). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன் நாச்சியார் தம்பதியரின் மகளான 10-ம் வகுப்பு மாணவி காவியா (15) ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாணவியின் வீட்டிலேயே இருவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டனர். தகவல் அறிந்த ஆலங்குளம் போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி மாணவியின் உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கும் ஆகாஷ் உடலை சாத்தூர் அரசு மருத்துவமனைக்கும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

15 வயதான பள்ளி மாணவியின் தற்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துகின்ற நிலையில் தற்கொலை சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.