• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பழுதாகி நின்ற அரசு ஏசி பேருந்து..,

ByAnandakumar

Sep 5, 2025

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை மண்டலத்துக்கு சொந்தமான திருச்சியில் இருந்து திருப்பூர் வரை செல்லும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளது.

அந்த ஏசி பேருந்து கரூர் திருக்காம்புலியூர் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் ரவுண்டானா அருகில், திடீரென கிளட்ச் பழுதாகி நின்றுள்ளது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் அந்த பேருந்தை கை தாங்கலாக தள்ளி சென்று சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.

பேருந்து பழுது காரணமாக திருச்சியில் இருந்து கரூர் வழியாக திருப்பூர் வரை செல்லக்கூடிய 20க்கும் மேலான பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

பேருந்து பழுது குறித்து அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மண்டல குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து பாதி வழியில் பழுதாகி நின்றதும், பயணிகள் பாதிக்கப்பட்டதும் பிரச்சனையாகியுள்ள நிலையில், பேருந்தில் பயணித்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்தை கையில் தள்ளிச் செல்லும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.