கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுகாசனப் பெருமாள் உடனடியாக ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஸ்ரீ மகா கணபதி, ஸ்ரீ பத்மாவதி தாயார், ஸ்ரீ சக்கரத்தாழ்வார்,ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ விஸ்வகர்மா, ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர், ஸ்ரீ கருடாழ்வார் சுவாமிக்கு கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

முன்னதாக புனித கலசங்களுக்கு விநாயகர் வழிபாடு, பூர்ணாஹீதி, தீபாரதனை காண்பிக்கப்பட்டது நான்கு கால யாக பூஜைகள் நிறைவு பெற்று
சிவாச்சாரியார்கள் புனித கலசங்களை தலையில் சுமந்தவாறு ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது

தொடர்ந்து சுவாமிக்கு புனித தீர்த்தங்கள் மற்றும் பால் அபிஷேகம் செய்யப்பட்டு தாமரை மாலை மற்றும் வண்ணம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமிக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.







; ?>)
; ?>)
; ?>)