விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கீழதயில்பட்டி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குயில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சிரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை 40-க்கும் மேற்பட்ட அறைகளின் சுமார் 100க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது பட்டாசு கலவை செய்த போதுஉராய்வினால் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு அறையில் மேற்கூரை மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவருகிறது.
இந்த வெடிப்பு பற்றி குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வெடி விபத்து குறித்து ரொம்பக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யாரேனும் காயம் அடைந்துள்ளன என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)