இது குறித்து தமிழ் பேரரசு கட்சியின்,திருச்சி மண்டல செய லாளர் மக்கள் காவலர் முடிமன்னன் அரியலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கையாவது,
செந்துறை வட்டம் அயன் தத்தனூர் கிராமத்தில் இருந்து அங்கனூர் செல்லும் சாலை நிலை,மக்கள் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லை,மேலும் இந்த சாலைசுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் மரண குழிகளும் மனிதன் பயண செய் வதற்கு முற்றிலும் தகுதியற்ற ஒரு சாலை தான் தற்போது இருந்து வருகிறது,

இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் பலமுறை என் கட்சியின் சார்பில் கோரிக்கை வைத்துள்ள நிலையில்,இந்த சாலை புறக்கணிக்கப்பட்ட நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. தற்பொழுதுள்ள மாவட்ட ஆட்சியராவது இந்த சாலையின் அவலத்தை புரிந்து கொண்டு இச்சாலையினை புதுப்பித்து (புதிய சாலை அமைத்து) தருமாறு தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள செய்தி குறிப்பில் அவர் கூறியுள்ளார்.













; ?>)
; ?>)
; ?>)