கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி ஷா நகரில் சாலை, கழிவுநீர் வடிகால் , சரியான முறையில் குடிநீர் வருவதில்லை என கூறி அப்பகுதி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு ஊர்வலமாக மனு அளிக்க செல்ல முயன்ற பொழுது அப்பகுதிக்கு வந்த போலீசார் மற்றும் நகராட்சி ஆணையர் கோபாலகிருஷ்ணன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் அதிகாரியிடம் எந்த ஒரு அடிப்படை வசதியும் சரியாக முறையில் செய்து தரவில்லை எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தங்களது பிரச்சனைகளுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 100க்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றாக கூடி மனு அளிக்க வந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.













; ?>)
; ?>)
; ?>)