புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பிரார்த்தனை (PRAYER) நிறைவாக சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் ரோட்டரி மாவட்டம் 3000தின் ஆளுநர் J.கார்த்திக் அவர்களின் கனவு திட்டமான “ஆழித்துளி” என்ற தலைப்பில்

1)நமது இல்லங்களில் தண்ணீர் குழாய்கள் கசிவின்றி இருக்கிறதா
என அடிக்கடி பரிசோதனை செய்யவும்,
2)கைகளை அலசும் போது ஒரு கையால் குழாயை அளவாக திறந்து விட்டு பயன்படுத்தவும்,
3)மேல்நிலைத் தொட்டியில் இருந்து கீழ்நோக்கி வரும் நீர் அதிக அழுத்தத்துடன் இருக்கும் ஆதலால் அழுத்தத்தைக் குறைக்க அழுத்தக் குறைப்பானைப் பயன்படுத்தவும்,

4)மழைக் காலங்களில் மழை நீரை சேமித்து விட்டு உபயோகத்திற்கு பயன் படுத்துவோம்.
5)மொட்டை மாடியில் இருந்து பெறப்படும் நீர் அசுத்தம் அடையாமல் இருக்க சரியான கால இடைவெளியில் மேல் தளத்தை தூய்மை செய்வோம்.
6)நிலத்தை அதிகமாக சிமெண்ட் தரை போட்டு மூட வேண்டாம் இதனால் நிலத்தில் நீர் உறிஞ்சுவது தடைபடும்.
போன்ற நீர் சேமிப்பு பற்றிய உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது முன்னதாக வருகை தந்த அனைவரையும் தலைமை ஆசிரியர் B.லதா வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் கண.மோகன்ராஜ் கலந்து கொண்டு நீர் மேலாண்மை குறித்த செய்திகளை எடுத்துக் கூறினார் நிறைவாக சங்க செயலாளர் R.சங்கர் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மேனாள் சங்க செயலாளரும், பள்ளி மேனாள் மாணவருமான K.ஓம்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
