தமிழன் சிலம்ப பாசறை இயல் நாட்டார் கலை மற்றும் பண்பாட்டு நடுவம் சார்பில் 2025 ஆம் ஆண்டிற்கான மாபெரும் சிலம்பப் போட்டி திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை சர்வதேச சிலம்ப கூட்டமைப்பின் கலை சுடர்மணி ஆசான் பாலசுப்ரமணியன் மற்றும் தமிழன் சிலம்ப பாசறை நிறுவனர் கார்த்திக் ரகுநாத் ஆகியோர் தலைமை தாங்கினர் ,57 வது வார்டு மாமன்ற உறுப்பினர் முத்து செல்வம் முன்னிலை வகித்தார்.

இந்தப் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக காவேரி கலைக் கல்லூரி உதவி பேச பேராசிரியர் சதீஷ்குமார், பிரம்ம ஞானம் தர்மசாலை தவத்திரு அருள்மிகு அடிகளார், திமுக மாவட்ட பிரதிநிதி வழக்கறிஞர் மணிவண்ண பாரதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த போட்டியானது 4 வயது முதல் 18 வயதிற்கு மேற்பட்டோர் வரை உள்ளவர்களுக்கு ஒற்றை கம்பம், இரட்டை கம்பம், தொடும் முறை ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.