விலைவாசி உயர்கிறது என்பதை அப்பர் மிடில் கிளாஸ், மிடில்கிளாஸ், லோயர் கிளாஸ் என அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் ஒரே இடம் டீக்கடைதான்.
இந்த வகையில் சென்னை டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக சென்னை டீக்கடை வியாபாரிகள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
கேஸ் விலை உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக அச்சங்கம் ஆகஸ்டு 31 ஆம் தேதி கூறியுள்ளது. இதன்படி,
ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

சென்னையில் இந்த விலை உயர்வு நாளையே அதாவது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் டீ கடைகளில் ஒட்டப்பட்டுள்ள புதிய விலைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த விலை டீக் கடைகளில் மட்டும்தான். ஏற்கனவே ஹோட்டல்களில் டீ, காபி விலை ஏறிவிட்டது. சாப்பாடு விலையும் ஏறிவிட்டது.
டீக் கடைகளில் டீ, காபி விலை ஏற்றப்படும் நிலையில் போண்டா, பஜ்ஜி, வடை விலையும் உயர்ந்துவிட்டது. இனி போண்டா. பஜ்ஜி, சமோசா ஆகியவை தலா 15 ரூபாய் ஆக விற்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், ஹார்லிக்ஸ், பூஸ்ட் பானங்களின் விலையும் டீக் கடைகளில் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னையில் தொடங்கிய இந்த விலை உயர்வு, அடுத்தடுத்த நகரங்களுக்கும் வெகு விரைவில் பரவுகிறது.