விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு தேனியில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் திருமேனிகளை வைத்து நேற்று வழிபாடு நடைபெற்றது.
இதனை அடுத்து விநாயகர் திருமேனிகளைக் இன்று ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது

இதற்காக தேனியில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் திருமேனிகளை பொம்மையகவுண்டன்பட்டி பகுதிக்கு வாகனத்தில் எடுத்துவரப்பட்டது அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது.
செயற்கை யானையை தத்ரூபமாக அழைத்து வரப்பட்டு சுமார் 300க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் சிறிய விநாயகர் சிலைகளை தலையில் சுமந்து கொண்டு மேளதாளத்துடன் முன்னே சொல்ல சிறுவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் திருமேனிகளின் ஊர்வலம் தொடங்கியது.

பொம்மையை கவுண்டன்பட்டியில் தொடங்கிய இந்த ஊர்வலம் அல்லிநகரம், பழைய பேருந்து நிலையம், பங்களாமேடு உள்ளிட்ட தேனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து அரண்மனை புதூரில் உள்ள முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர்.
இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த விநாயகர் ஊர்வலத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை எடுத்து வரப்பட்டு ஆற்றில் கரைத்தனர்.