விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி, மல்லி காவல் நிலையம் எதிரில்… யூனி 360° டர்ப் கிரிக்கெட் மற்றும் கால்பந்து புல்வெளி மைதானத்தை, இன்று ஆகஸ்டு 28 ஆம் தேதி திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சரும் அதிமுக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி.

மைதானத்தை திறந்து வைத்து பேசியதோடு விளையாட்டு மைதானத்திலும் களமிறங்கி ஆடி அசத்தினார் ராஜேந்திரபாலாஜி.
கால் பந்தினை உதைத்தும், கிரிக்கெட் விளையாட்டில் பேட் பிடித்தும் தனது ஆட்டத் திறனையும் வெளிப்படுத்தினார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

இந்நிகழ்வின்போது அதிமுக மாவட்ட, நகர நிர்வாகிகள், விளையாட்டு வீரர்களும் உடனிருந்து ஆரவார ஒலி எழுப்பி ரசித்தனர்.