கரூர் மாவட்டம், மகாதானபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

அப்போது முகாமிற்கு வருகை தந்த கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி மேடையில் பேசிவிட்டு கீழே இறங்கிய பொழுது அங்கிருந்து பொதுமக்கள் அனைவரும் எம்எல்ஏ வை முற்றுகையிட்டு அடிப்படை வசதியான குடிநீர் வசதி செய்து தரவில்லை. 100 நாள் வேலை 10 நாட்கள் கூட கொடுக்கவில்லை. ரேஷன் கடையில் கைரேகை இயந்திரம் கோளாறு என்று சொல்லி 2 மாதங்களாக பொருட்கள் வழங்கவில்லை என பெண்கள் முற்றுகையிட்டதால் சட்டமன்ற உறுப்பினர் செய்வது அறியாமல் திகைத்துப் போய் பதில் அளிக்க முடியாமல் நின்றார். பின்னர் அங்கிருந்து மக்கள் பேசுவதை கூட கண்டுகொள்ளாமல் பாதியிலேயே அங்கிருந்து சென்று விட்டார்.

இதில் ஒரு பெண்மணி தேர்தலின் போது மட்டும் இப்படி கும்பிடுகிறீர்கள் அப்படி கும்பிடுகிறீர்கள் காலில் விழுகிறீர்கள் தேர்தல் முடிந்த பிறகு கண்டுகொள்ளவில்லை என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீர் வசதி கூட சரியாக செய்து தராததால் காலியாக இருந்த குடிநீர் கேன்களை பார்த்து குடிநீருக்காக அங்கும் இங்கும் அலைமோதினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.