மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஜெயலட்சுமி விஜயலட்சுமி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக பணிகள் கடந்த சில நாட்களாக புணரமைப்பு செய்யப்பட்டது.

தொடர்ந்து காலை திருக்கோஷ்டியூர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம அய்யங்கார் தலைமையில் மங்கள இசை உடன் விஷ்வக்சேனர் முதலாம் காலயாக பூஜை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து புண்யாவாகனம், வாஸ்து சாந்தி ஹோமம், அங்குரார்பணம், நடைபெற்றது. விமான கலசம் பிரதீஷ்டை நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேஸ்வரி திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் முள்ளிபள்ளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.