• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டியில் காலை உணவு திட்டம் நிகழ்ச்சி..,

ByP.Thangapandi

Aug 26, 2025

இன்று காலை முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியினை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆர்.சி. சிறுமலர் துவக்கப்பள்ளியில் நகரச் செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன், உசிலம்பட்டி நகர் மன்ற பொறுப்புத் தலைவர் தேன்மொழி, நகராட்சி ஆணையர் இளவரசன் ஆகியோர் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினர். மாணவ மாணவிகளுக்கு காலை உணவு பொங்கல் மற்றும் சக்கரை பொங்கல் கேசரி சாப்பிட்டனர்.

இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.