விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளராக தாமோதரன் பணிபுரிந்து வருகிறார். சிவகாசி பேருந்து நிலைய மும்முனை சந்திப்பில் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பார்வை தெரியாத வயதான முதியவர் சாலையை கடக்க முடியாமல் நின்று கொண்டிருந்தார்.

உடனடியாக இதை கவனித்த எஸ்.ஐ தாமோதரன் வயதான முதியவரின் கைகளை பிடித்து சாலையை கடக்க உதவி செய்தார். மேலும் பசியில் வாடிய முதியவருக்கு அவரது சொந்தப் பணத்தில் டீ வடை வாங்கி வழிய அனுப்பி வைத்துள்ள சம்பவம் பெரும் பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பார்வையற்ற முதியவருக்கு போக்குவரத்து எஸ்ஐ உதவி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதோடு அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.