சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சியில் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் தலைமையிலும் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியம் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் வார்டு பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். இந்நிகழ்வில் வட்டாட்சியர் விஜயகுமார் சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் ரமேஷ், அனைத்து துறை அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மற்றும் திருப்புவனம் தெற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கோபால் கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் அறிவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.