திருப்பரங்குன்றம் ஆக,17-திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் 2 ஆடிக் கார்த்திகை கொண்டாடப்பட்டது. ஒரே மாதத்தில் 2 முறை தங்கமயில்வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளி அருள்பாலித்தார்.

அங்குபக்தர்கள் குவிந்து இருந்து தரிசனம் செய்தனர் கார்த்திகை விழாக்கள்
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத் திருவிழாகொண்டாடப்படுகிறது இதே போல ஆடி மாதத்தில் ஒரு நாள் ஆடிக் கார்த்திகை விழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. சன்னதிதெருவில் சொக்கநாதர் கோவில் அருகே ஆடிக் கார்த்திகைக்காக சுவாமி எழுந்தருளுவதற்கு என்று தனி மண்டபமே உள்ளது.
இது தவிர ஒவ்வொரு மாதமும் மாதகார்த்திகையும் கொண்டாடப்படுகிறது. மாத கார்த்திகைதோறும் தங்க மயில்வாகனத்தில் தெய்வானையுடன்சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி நகர் உலாவ வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். ஆடிக்கார்த்திகை கொண்டாட்டம் இந்த நிலையில்கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி (ஆடி மாதம் 4-ந் தேதி) அன்று இந்த ஆண்டிற்கானஆடிக் கார்த்திகை கொண்டாடப்பட்டது.

அன்று வழக்கம் போல ஆடிக்கார்த்திகை மண்டபத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினார். மேலும் காலையில் இருந்து இரவு வரை தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிலையில் ஆடிக்கார்த்திகை மண்டபம் வளாகத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க தங்கமயில்வாகனத்தில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானையும் நகர் உலாவ வந்துபக்தர்களுக்கு அருள் காட்சி தந்தனர். அன்று காலை முதல் இரவு வரைஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
ஒரே மாதத்தில் 2-வது முறையாக ஆடிக்கார்த்திகை இந்த நிலையில் நேற்று (16-ந் தேதி) (ஆடி 31-ந் தேதி) இந்த ஆண்டில் ஆபூர்வமாக 2-வது முறையாக ஆடிக்கார்த்திகை வந்தது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து இருந்து கோவிலுக்குள் சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மேளதாளங்கள் முழங்கஒரே மாதத்தில் 2-வது முறையாக தங்க மயில்வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் அமர்ந்து நகர் உலாவ வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நகர் வீதிகளில் ஆங்காங்கே பக்தர்கள் திரண்டு இருந்து முருகப்பெருமான், தெய்வானை அம்பாளை வழிப்பட்டனர்.







; ?>)
; ?>)
; ?>)