புதுக்கோட்டை மாவட்டம் குலமாங்கல்ய நாட்டை சேர்ந்த தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் குலமாங்கல்ய நாட்டார்கள் சார்பில் ஆடி மாத வெள்ளிகிழமையை முன்னிட்டு 23 ம் ஆண்டு மஹா மாங்கல்ய யாகசாலை பூஜை நடைபெற்றது. இதில் தென்னங்குடி சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள ஆயிரகணக்கான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டனர்.

இந்த பூஜையில் சுமங்கல்ய பாக்கியம் தங்களது இல்லங்களில் சுபகாரியம் நடைபெற சிவாசாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் நடைபெற்று மாங்கல்ய சாத்துதல் நிகழ்ச்சி நடைபெற்று பஞ்சமுக தீபாதாரனை காண்பிக்கபட்டது.
அப்போது ஒம் சக்தி பராசக்தி என வழிபாடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.