• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு..,

ByV. Ramachandran

Aug 14, 2025

நீதிமன்றம் பலமுறை எச்சரித்தும் ஒரு கார்ப்பரேட் கம்பெனி போல திருக்கோயிலை மாற்றி வருவது சிவனடியார்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிறுவிய கல்வெட்டுகளை அதனுடைய தொன்மையை புரியாமல்,கோயில் நிர்வாகஅதிகாரிகள் நடந்து கொள்வது அவர்களுடைய பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.

மேலும் இதற்கு முன் இருந்த அறநிலையத்துறை அதிகாரி பல லட்சம் மோசடி செய்தும் இதுவரை அவரை தண்டிக்கப்படவில்லை காரணம்,என்ன செய்தாலும் எதுவும் இந்த அரசு கண்டு கொள்வதில்லை என்ற நிலைக்கு வந்த பின் இவர்கள் இந்நிலையை கையாண்டு வருகிறார்கள். கோயிலின் புராதான சின்னங்களை அழிப்பதற்கு இவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்று சிவனடியார்கள் மிக வேதனையுடன் தெரிவித்தது.

மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது காரணம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் மூலவர் தென் பகுதிக்கு செல்லும் வழியில் திருக்கோயில் நிர்வாகம் திடீரென்று சில்வர் கம்பி அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் துளையிட்டு அழித்து வருகின்றனர். இதற்கு முன் இருந்த செயல் அலுவலர் கோயிலில் இருந்த கட்டிடங்களையும் கற்களையும் சேதப்படுத்தி அழித்து விட்டார். தற்பொழுது உள்ள செயல் அலுவலர் அவரை பின்பற்றி வருகின்றார் கல்வெட்டை சேதப்படுத்துவதற்கு யாரிடம் அனுமதி பெற்றார்கள்?

கடந்த காலங்களில் காசி விஸ்வநாதர் கோவிலை நீதிமன்றம் பல தடவை எச்சரித்தும் கோயிலின் பழங்கால கட்டிடங்களையும் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளையும் சேதப்படுத்துவதற்கு சிவனடியார்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்படி பொறுப்பற்ற முறையில் செய்து வரும் செயலை சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் வேதனையுடன் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது