அகில இந்திய செசின்கான் இசின்ரியூ கராத்தே சங்கத்தின் தேசிய செயலாளர் ரென்சி செல்வகுமார் விழா நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தினார்.
அகில இந்திய தலைமை பயிற்சியாளர் கோஷி சக்திவேல், தஞ்சாவூர் செல்ல பாண்டியன் நடிகர் கராத்தே ராஜா உட்பட பலர் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர்.

முன்னதாக மதுரை செய்தியாளர் சங்கத் தலைவர் கதிரவன் கராத்தே மாஸ்டர்கள் செல்வகுமார், சக்திவேல் செல்ல பாண்டியன் ஐயோ குத்துவிளக்கு ஏற்றி கொடி அசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கராத்தே ராஜா, நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ஸ்டார் குரு, மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க தலைவர் கதிரவன், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் தமிழ்ச்சங்கு ஆகியோர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் மாணவர்களுக்கு வழங்கி பாராட்டினர்.