மதுரை அவனியாபுரம் புரசரடி தெருவை சேர்ந்தவர் காந்தி செட்டியார் இவரது மகன் குமரவேல் (வயது 51 ) . குமரவேலுக்கு திருமணம் ஆகி திலகவதி என்ற மனைவியும் ஆனந்த் (வயது 21)மகனும், ஸ்ரீரிமதி (வயது 18)மகளும் உள்ளனர்.
குமரவேல் அவனியாபுரம் பகுதியில் பவர் லூம் விசைத்தறியின் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு திடீரென நெஞ்சு எரிச்சல் என மனைவி திலகவதியிடம் கூறிக் கொண்டிருந்தார்.சுடு தண்ணியும் வெள்ளைப்பூடும் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐந்து நிமிடத்திலேயே திடீரென மயங்கி சரிந்து விழுந்தார்.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் வந்து குமரவேலின் உடலை பரிசோதனை செய்தபோது அவர் இறந்ததாக கூறினர்.

இதனை அடுத்து வீட்டில் இருந்து அவரது தாயார் மகன் இறந்த செய்தி கேட்டு மகனின் கையைப் பிடித்து அழுதவாறு இருந்தவர் அவரும் இறந்து விட்டார் மகன் இறந்த செய்தி கேட்டு உடனே தாய் இறந்தது அப்பகுதி மக்களிடையே மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
தாயின் பாசத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டான சம்பவமாக உள்ளது.