தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் ‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ (Drug Free Tamil Nadu) மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக மதுரை மாவட்டம், அமெரிக்கன் கல்லூரியில் இருந்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் மாநகர காவல் ஆணையர் லோகநாதன், காவல்துறை துணைத் தலைவர்(மதுரை சரகம்) முனைவர் அபினவ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.ப.அரவிந்த், மாநகராட்சி துணை மேயர் துணை மேயர் தி.நாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட பலர் கலந்துகொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார், போதை இல்லாத தமிழ்நாடு என்பதே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவாகும். அதபோலவே நாமும் போதைப் பொருள்கள் இல்லாத மதுரை மாவட்டத்தை உருவாக்குவதே நமது கனவாக நினைக்க வேண்டும். போதை பொருள் இல்லாத மாவட்டமாக கொண்டு வருவதற்காக போராடும் சக்தி கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தன்னார்வலர்கள் என அனைவரும் பல்வேறு போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்குபெற்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இன்று மாநில அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக மேற்கொண்டதற்காக இரண்டாம் பரிசினை நமது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. மேலும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகத்திற்கு துணையாக இருக்கக்கூடிய காவல்துறைக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எது நல்லது எது கெட்டது என்று தெரியாத இந்த இளம் பருவத்தில் ஒருசில சூழ்நிலையில் உங்களுடன் இருப்பவர்கள் போதைப் பொருட்களை சிறிது பயன்படுத்த அறிவுறுத்தினாலும் பயன்படுத்த வேண்டாம். அவர்கள் சொன்னதை கேட்டு போதை பொருட்கள் சிறிது பயன்படுத்தினாலும் நீங்கள் அடிமையாகி விடுவீர்கள். முதலில் இலவசமாக கிடைக்கப்பெறும். போதைப்பொருட்கள் பின்னாளில் பெரிய தொகை கொடுத்து பெறவேண்டிய சூழ்நிலை உருவாகும். எனவே இந்த சமூகத்தின் எதிரியாக உள்ள போதைப் பொருள்களை ஒழிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து முதலில் நமது குடும்பத்தை போதைப் பொருள் இல்லாத குடும்பமாக உருவாக்குவோம். பின்னர் போதைப்பொருள் இல்லாத தெருவினையும், போதை பொருள் பயன்படுத்தாத ஊரையும் உருவாக்குவோம். ஜனவரி 2025 முதல் தற்போது வரை பள்ளி மற்றும் கல்லூரிகளில் 228, பொது இடங்களில் 37, நாடகங்ள் 13, தெருக்கூத்து 10 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. 2025 – 2026 நிதியாண்டில் நடைபெற்ற 786 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 22,000 நபர்கள் பார்வையிட்டுள்ளனர் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்கள் (Anti drug clubs) நன்முறையில் செயல்பட்டதற்காக மதுரை, புதுமாகாளிப்பட்டி, பாரதிதாசனார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு முதலாவது இடம், பரிசு தொகை ரூ.15,000 மற்றும் சான்றிதழ், மதுரை, அவனியாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இரண்டாவது இடம், பரிசு தொகை ரு.10,000 மற்றும் சான்றிதழ், மதுரை, கருப்பாயூரணி லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிக்கு மூன்றாவது இடம், பரிசு தொகை ரூ.5000 மற்றும் சான்றிதழ், மதுரை, மூலக்கரை, திருமலை நாயக்கர் கல்லூரிக்கு முதலாவது இடம், பரிசு தொகை ரூ.15,000 மற்றும் சான்றிதழ், மதுரை, திருப்பரன்குன்றம், தியாகராசர் பொறியியல் கல்லூரிக்கு இரண்டாவது இடம், பரிசு தொகை ரூ.10,000 மற்றும் சான்றிதழ், மதுரை, பீ.பீ.குளம், டோக் பெருமாட்டி கல்லூரிக்கு மூன்றாம் இடம், பரிசு தொகை ரூ.5000 மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.ஜே.பிரவீன்குமார் வழங்கினார்.