• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணியால் பரபரப்பு..,

ByKalamegam Viswanathan

Aug 10, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இருந்து திருமங்கலம் சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் ஐஸ் பாக்ஸ் பார்சல் கொண்டு சென்றுள்ளார். சோழவந்தான் பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்து வட்ட பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது நடத்துனர் அவரிடம் ஐஸ் பாக்ஸிற்கு இரண்டு லக்கேஜ் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பயணி ஒரு லக்கேஜ் தான் எடுப்பேன் என பிடிவாதம் பிடித்துள்ளார் இதனை யடுத்து அவரிடம் விளக்கமாக எடுத்துக் கூறிய நடத்தினர் ஐஸ் பாக்ஸிற்கு இரண்டு லக்கேஜ் எடுக்க வேண்டும் என்று அரசு விதி உள்ளது என சுட்டிக்காட்டி தொடர்ந்து இரண்டு லக்கேஜ் எடுக்க வலியுறுத்தி வந்த நிலையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் பேருந்து வந்த பொழுது நடத்தினரிடம் பயணி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு லக்கேஜ் தான் எடுப்பேன் முடிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என பயணி பேசியதை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வந்த பயணியால் மற்ற பயணிகளுக்கும் இடையூறு ஏற்பட்டதாக தெரிகிறது

இதனையடுத்து சோழவந்தான் காவல் நிலையத்தில் பேருந்தை நிறுத்த சொன்ன நடத்துனர் கீழே இறங்கி காவல் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த காவல்துறையினரிடம் பேருந்தில் நடந்தவற்றை கூறி காவல் துறையினரை அழைத்து வந்துள்ளார்.

காவல்துறையினர் வந்து பயணியிடம் பேருந்து விதிமுறைகள் குறித்து அரசு போக்குவரத்து கழகம் என்ன கூறியிருக்கிறதோ அதன்படி தான் அவர்கள் நடந்து கொள்வார்கள். உனக்கு சந்தேகம் என்றால் போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது இரண்டு லக்கேஜ் எடுப்பதாக இருந்தால் பேருந்தில் பயணம் செய்யலாம். இல்லையென்றால் இறங்கி காவல் நிலையத்திற்கு வரவும் என கூறிய நிலையில் வேற வழி இன்றி சமாதானம் அடைந்த பயணி 2 லக்கேஜ் எடுக்க ஒப்புக்கொண்டார்.

பேருந்தில் லக்கேஜ் எடுப்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பேருந்து செல்வதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது. இரவு நேரம் என்பதால் அதிக பயணிகள் இல்லாத நிலையில் ஒருவாராக சமாளித்த போக்குவரத்து பணியாளர்கள் இதேபோன்று தினசரி பயணிகளால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக கூறிச் சென்றனர். ஆகையால் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளுக்கு உள்ள விதிமுறைகளை பேருந்தில் தகவல் பலகையாக வைத்தால் இது போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை என பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் கூறி சென்றனர்.