• Tue. Nov 18th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மஞ்சள் தண்ணீர் ஊற்றும் திருவிழா..,

ByG.Suresh

Aug 10, 2025

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தொடர்ந்து 157 ஆண்டுகளாக பழமை மாறாமல் வருடந்தோறும் மஞ்சள் தண்ணி ஊற்றும் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆடி முளைப்பாரி உற்சவ பொங்கல் விழா துவங்கியது. கடந்த மூன்று நாட்களாக ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம்,பறவைகாவடி,அலகு குத்தி எடுத்து வந்து பூக்குழி இறங்கி அம்மனுக்கு பொங்கல் வைத்தும் முளைப்பாரிகள் வளர்க்கப்பட்டு அதனை முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து அலங்கார குளத்தில் கரைத்து அம்மனை வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து விழாவின். முக்கிய நிகழ்வான இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சளால் அபிேஷகம் செய்யப்பட்ட பின்னர் தெருக்களில் உறவினர்களுக்கிடையே மாமன்,மச்சான் முறை கொண்ட ஆண்கள் மீது பெண்களும்,முறை பெண்கள் மீது ஆண்களும் மாற்றி,மாற்றி மஞ்சள் தண்ணியை உற்சாகமாக ஊற்றி கொண்டாடினர்.