மாநிலக் கல்விக் கொள்கையில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அரசு செய்துள்ளது அதை சார்ந்து விவாதத்திற்கு வர முடியாத பாஜக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறது
புதுக்கோட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக கல்வி உரிமை மீட்பு கருத்தரங்கம் நடைபெற்றது இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கருத்தரங்கிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் தற்போது உள்ள அனைவருமே இரு மொழி கொள்கையை கடைப்பிடித்து படித்தவர்கள் தான் இரு மொழி கொள்கைதான் தமிழகத்திற்கு என்று முதல்வர் உறுதியாக கூறிவிட்டார்.
மனப்பாடம் செய்து தேர்வு எழுதாமல் புரிந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும் என்று மாநில கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிந்தித்து கற்க வேண்டும் என்பதற்காக என்னென்ன தேவையோ அவை அனைத்தும் மாநில கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ளது.
மாணவர்களுக்கு மன உளைச்சல் இல்லாமல் இருப்பதற்காக கற்றலும் கற்பித்தலும் திட்டத்தையும் மாநில கல்விக்கொள்கையில் கொண்டு வந்துள்ளோம்.
ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து மாநிலக் கல்விக் கொள்கையில் அரசு செய்துள்ளது அதை சார்ந்து விவாதத்திற்கு வர முடியாத பாஜக பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறது.
கண்மூடித்தனமாக அரசியலுக்காக நாம் எதையும் எதிர்க்கவில்லை
எது எது எல்லாம் மாணவர்களுக்கு தேவையோ அதை நாங்கள் எடுத்துக் கொண்டுள்ளோம்.
அதை வைத்து தான் மாநில கல்வி குழுவை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை அனைத்து மாநிலங்களும் முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு அவர் அவர்களுக்கு என்று மாநில கல்வி கொள்கையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் நமது ஆசை.
இதை செய்தால் தான் நான் நிதி தருவேன் என்று கூறுவதை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது.

இவ்வாறு இருக்கும் போது மத்திய இணை அமைச்சர் எல் எல் முருகன் போன்றவர் இவ்வாறு கருத்து கூறுவதை நாம் எப்படி ஏற்பது அவர்கள் கூறும் கருத்திற்கு நாம் வருத்தம் தான் பாட வேண்டும். கண்மூடித்தனமாக நாம் எதை எதிர்க்கவில்லை.
மொழி சார்ந்து நம்முடைய கலாச்சாரத்தை மாற்றுவது தொடர்பாக ஏதாவது கொண்டு வந்தால் நாம் ஏற்கவில்லை உதாரணத்திற்கு குளக்கல்வி முறையை கொண்டு வந்தால் நாம் ஏற்க முடியாது.
மும்மொழி கொள்கையை கொண்டு வருவோம் என்று கூறினார். முதலில் எதிர்ப்பவர்கள் நாங்களாகத்தான் இருப்போம்.
மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்று நாம் கட்டாயப்படுத்தினால் அது ட்ராப் ரேஷியோவை தான் அதிகரிக்கும்.
மாநிலக் கல்விக் கொள்கை குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்கின்றன பாஜகவிடமிருந்து வரவேற்பு நாம் எதிர்பார்க்க முடியாது.








