மதுரை பரவையிலுள்ள மங்கையர்க்கரசி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் முனைவர் பி. அசோக்குமார் தலைமையேற்று துவக்கி வைத்தார். கல்லூரியின் இயக்குனர் அ.சக்திபிரனேஷ் முன்னிலை வகித்தார்.கல்லூரி முதல்வர் ஜே.கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்றார்.

துணை முதல்வர் முனைவர் விக்னேஷ் வரவேற்புரையாற்றினார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மேடைப் பேச்சாளர் முனைவர் பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையும் விதமாக வாய்ப்புகளை அள்ளித்தரும் மங்கையர்க்கரசி பொறியியல் கல்லூரியின் பெருமையையும் வாழ்க்கையின் தொடக்கம் சிறப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் வாழ்க்கையில் இலக்கை அடைவதற்கு கல்வியை கற்றுக் கொள்ளும் வரை பணிவோடும் கற்றுக் கொண்ட பின் சிறப்போடும் வாழ வேண்டும். அதற்கு அயராது உழைக்க வேண்டும் என்றும் பல கருத்துக்களை மாணவர்களிடையே கூறினார்.








