• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

எடப்பாடி இடமிருந்து சர்டிபிகேட் எதிர்பார்க்கவில்லை..,

ByS. SRIDHAR

Aug 7, 2025

திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். குடியரசு தலைவர் என்ன முடிவு அறிவிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்த்து அதன் அடிப்படையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.

ஆணவ படுகொலைகள் நடக்கப்போகிறது என்பதை யாருக்கும் தெரியாது,குற்றம் நடந்த பின்பு கொலையாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை பெற்றுக் கொடுத்து வருகிறோம்-புதுக்கோட்டையில் இயற்கை வளத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஏழாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது அதனை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞர் படத்திற்கு அமைச்சர் ரகுபதி மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி திரு ஒருவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதனைத் தொடர்ந்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசுகையில்

போலீசாரை தாக்கிவிட்டு செல்லும்போதுதான் என்கவுண்டர் சம்பவங்கள் நடக்கிறது, இல்லையென்றால் நடக்காது,வேண்டுமென்றே யாரும் என்கவுண்டர் சம்பவங்களை நடத்துவதில்லை.

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு உச்ச நீதிமன்றம் 10 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது வரவேற்கத்தக்கது. அரசின் திட்டங்களுக்கு முதலமைச்சரின் பெயரை அதிமுக ஆட்சிக்காலத்திலும் வைத்திருந்தார்கள்.

பெயர் வைப்பதில் நாங்கள் எங்களுக்காக போராடவில்லை உங்கள் அதிமுகவுக்காகவும் போராடி நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். எங்களுக்கு கட்சி வேறுபாடு கிடையாது.

பாஜக ஆளும் மாநிலங்களில் இரட்டை சதவீத பொருளாதார வளர்ச்சி அவர்களால் எட்ட முடிந்ததா திமுக ஆட்சியில் தமிழகத்தில் இரட்டை சதவீத பொருளாதார வளர்ச்சி எங்களால் எட்ட முடிந்தது.

இது முழுக்க முழுக்க தமிழக அரசு மட்டுமல்லாமல் முதலமைச்சரின் முயற்சியால் கிடைத்தது. அவருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம் இது.

திருவாரூரில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். குடியரசு தலைவர் என்ன முடிவு அறிவிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்த்து அதன் அடிப்படையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.

எதிர்க்கட்சி சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என்று சர்டிபிகேட் யாரும் கொடுக்க மாட்டார்கள்.

எடப்பாடி இடமிருந்து நாங்கள் அந்த சர்டிபிகேட்டை எதிர்பார்க்கவும் இல்லை மக்கள் எங்களுக்கு சர்டிபிகேட் அளித்து வருகின்றனர்.

மக்கள் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம் என்று கூறி தான் தொடர்ந்து வெற்றி தேடித் தருகின்றனர். யாரையும் குற்றம் செய்யாமல் தடுக்கக்கூடிய வழிமுறைகள் எங்கேயும் இல்லை.

குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதைத்தான் பார்க்க வேண்டும் தவறு நடந்துவிட்டால் உடனடியாக குற்றவாளியை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வாங்கித் தரும் ஒரே அரசு தற்போதைய தமிழக அரசு.

காவல்துறையை தாக்கி குற்றவாளி தப்பிக்க முயன்றால் அவர்களை என்கவுண்டர் செய்துதான் புடிக்க வேண்டும் அதன் அடிப்படையில் தான் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளது.

ஆணவ படுகொலைகள் நடக்கப்போகிறது என்பதை யாருக்கும் தெரியாது,குற்றம் நடந்த பின்பு கொலையாளிகளை கண்டறிந்து கடுமையான தண்டனை பெற்றுக் கொடுத்து வருகிறோம்.

இந்தியாவிலேயே கட்டுமான பொருட்கள் தமிழகத்தில் தான் தங்கு தடை இன்றி கிடைக்கிறது.

மத்திய இணை அமைச்சர் எல் முருகனுக்கு தமிழகத்தில் எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது வேலை வாய்ப்பு எவ்வளவு வந்துள்ளது என்பது குறித்து
தெரியாதா.

பொறியியல் படித்த மாணவர்கள் தமிழகத்தில் தான் அதிகம் பேர் வருகின்றனர் அவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு தமிழகத்தில் கிடைத்து வருகிறது.

விஜயகாந்தின் பெயரை அரசியல் கட்சிகள் பயன்படுத்தக் கூடாது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளது. தொடர்பாக கேள்விக்கு பதில் அளித்து அமைச்சர் நாங்கள் யாருடைய பெயரையும் தெரிவித்து வாக்குகளை வாங்கும் நிலையில் இல்லை நாங்கள் எங்களுடைய தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்கள் கூறி வாக்குகளை பெறுவோம்.

தமிழகத்தில் காவல்துறைக்கும் பாதுகாப்பு உள்ளது எங்கேயும் பாதுகாப்பு இல்லை என்ற நிலை இல்லை ஏதோ ஒரு சில நேரங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது இதைவிட மோசமான நிகழ்வுகள் வடமாநிலங்களில் நடக்கிறது அதை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் மிக மிகக் குறைவு.

எடப்பாடி பழனிச்சாமி மீது கூறும் எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் பதிலளிக்க மாட்டார் மௌனமாகவே இருப்பார். மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.