• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ அழகியநாயகி அம்பாள் கோவில் பௌர்ணமி பூஜை..,

ByV. Ramachandran

Aug 6, 2025

நிகழும் மங்களகரமான 1200 ஆம் ஆண்டு விஷ்வா வசு வருடம் ஆடி மாதம் 14ஆம் தேதி 30/7/2025 புதன்கிழமை முதல் ஆடி மாதம் 21ஆம் தேதி 6/8 /2025 புதன் வரை 32 வது ஆண்டு பௌர்ணமி பூஜையும் 14 வது ஆண்டு முளைப்பாரி திருவிழாவும், அம்பாள் அருளால் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

8 /8/ 2025 வெள்ளிக்கிழமை காலை குற்றால தீர்த்தம் அழைத்து வருதலும், பகல் 9 மணிக்கு மேல் 108 குடம் அபிஷேகம் நடைபெறுதலும், மாலை 4 மணிக்கு மேல் முளைப்பாரி ஊர்வலம், இரவு ஆறு மணிக்கு அம்பாள் வீதி உலா நடைபெறும். இரவு 10 மணிக்கு அலங்கார தீபாரதனையும் சிறப்பு பூஜையும் நடைபெறும் 9/ 8/ 2025 சனிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் கும்மி பாட்டு, முளைப்பாரி கரைத்தல், மதியம் 12 மணிக்கு மேல் அன்னதானம் நடைபெறும். அன்னதானம் ஊர் பொது மக்கள் சார்பாக நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை சிறப்பாக விழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள். மேலும் திருவிழா தொடங்கிய நாள் முதல் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. பக்தர்களுக்கு பிரசாதமும் அருள்பிரசாதமும் வழங்கி வருகிறார்கள். அம்மன் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். குறிப்பாக பெண்கள் இரவில் கும்மி பாட்டுக்கு இசையமைத்து பாடி வருகிறார்கள். விழா மிகச் சிறப்பாக நடந்து வருகிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.