• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி தேரோட்டம்..,

ByV. Ramachandran

Aug 5, 2025

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென்தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவத்தலங்களில் ஒன்று. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடித்தவ சு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா கடந்த ஜூலை 28ஆம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தொடர்ந்து சுவாமி, அம்பாள் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு 9-ம் திருநாளான நேற்று காலை 5:30 மணிக்கு மேல் ஸ்ரீ கோமதி அம்பாள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் அதனை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்தில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, நகராட்சி ஆணையாளர் சாம் கிங்ஸ்டன், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜேஷ் கண்ணா, முதல்வர் பழனி செல்வம், தொழிலதிபர்கள் திவ்யா எம். ரெங்கன், ராமகிருஷ்ணன், சி. எஸ்.எம்.எஸ் சங்கர சுப்பிரமணியன், சுந்தர், குமரன், மாரிமுத்து, திமுக மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா, தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், மாநில இளைஞரணி துணை செயலாளர் இசக்கியப்பன், பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலபதி, நகரச் செயலாளர் ரத்னவேல்குமார், பாஜக நகரத் தலைவர் உதயகுமார், மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், கல்வியாளர் பிரிவு செயலாளர் வெங்கடேஸ்வர பெருமாள், நகர்மன்ற உறுப்பினர்கள் கௌசல்யா வெங்கடேஷ், செல்வராஜ், முப்பிடாதி காவல் கிளி, மாரிச்சாமி, ராஜேஸ்வரி கந்தன், புஷ்பம், அண்ணாமலை ஹோட்டல் உரிமையாளர் சுப்பையா (எ) ரமேஷ், மற்றும் மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு பதினோராம் திருநாளான நாளை ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. பாதுகாப்பு பணிக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் கூடுதல் மாவட்ட துணை கண்காணிப்பாளர் சங்கர், ஜூலியர் சீசர், சங்கரன்கோவில் துணை காவல் கண்காணிப்பாளர் செங்கோட்டு வேலவன் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.