புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடி கிரீன் கார்டன் நகரில் வசித்து வரும் கூலித்தொழிலாளி கலியபெருமாள்,குமரி தம்பதியரின் மகள் ஹேமா MBA பட்டதாரி ஆவார்.

இவருக்கும் கும்பகோணம் அடுத்த தாராசுரத்தைச் சேர்ந்த லெட்சுமணன், வசந்த தம்பதியரின் மகனான செல்வ.முத்துகுமரனுக்கும் (BE சாப்ட்வேர் இன்ஜினியர் பட்டதாரி) கடந்த 23.05.2025 அன்று இரு வீட்டார் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்யபட்டு திருமணம் நடைபெற்றது.
புகழ்பெற்ற IT நிறுவனத்தில் செல்வ . முத்துகுமார் பணியாற்றி வருவதால் தனது மனைவி ஹேமாவை அழைத்து கொண்டு பெங்களூரில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஆடி மாதம் என்பதால் ஹேமாவை பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
அப்போது தனது கணவர் முத்துகுமாரன் தன்னை வரதட்சணை கேட்டு மிரட்டி வருவதாகவும் பல வழிகளில் செக்ஸ் டார்ச்சர் செய்வதால் அவருடன் வாழ பிடிக்க வில்லை என பெற்றோர்களிடம் கண்ணீர் விட்டு கதறி உள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து கணவன் தகாத வார்த்தைகளால் கைபேசியில் பேசியதால் மனமுடைந்து ஹேமா வீட்டில் நேற்று மதியம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் கணவன் மற்றும் மாமனார், மாமியாரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உடலை வாங்க மறுத்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்







; ?>)
; ?>)
; ?>)