இந்த நிலையில் தற்போது காரியாபட்டி, கழுவனச்சேரி, கரிசல்குளம், பிச்சம்பட்டி, மீனாட்சிபுரம், மந்திரிஓடை, ஆவியூர், முடுக்கன்குளம், கல்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையினால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

தற்போது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் ஆடிப்பட்டம் நாளை மறுநாள் வருவதை ஒட்டி விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை உழுது விதை விதைப்பதற்காக தயார் படுத்தி வரும் நிலையில் தற்போது பெய்து வரும் இந்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.