சென்னை ஆலந்தூர் எம் கே என் சாலையில் பள்ளிகள் அதிகம் உள்ளதால் அங்கு வரும் கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
இதன் காரணமாக காலை 7 மணி முதல் இரவு பத்து மணி வரை கனரக வாகனங்கள் ஆலந்தூர் மார்க்கெட்டுக்குள் செல்ல தடை உள்ளது.

ஆலந்தூர் மார்க்கெட்டில் உள்ள பெரும் நிறுவனங்களின் வாகனங்கள் காலையில் மண்டி தெரு ஆலந்தூர் மார்க்கெட் உள்ளிட்ட சாலைகளை ஆக்கிரமித்து கொள்கின்றன. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றனர். இதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியவில்லை எனவும் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வரமுடியவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் லப்பைத் தெரு, ஜின்னா லைன் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும்,

இது குறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாக மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் பல முறை புகார் அளித்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என தெரிய வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து காவல்துறையை கண்டித்து பொதுமக்களின் சார்பில் கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டது.
இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர் அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செய்தியாளரை பார்த்து வீடியோ எடுத்து என்ன பண்ண போற உன்னால எதுவும் முடியாது என செய்தியாளரை மிரட்டும் தோணியில் பேசினார்.
செய்தியாளரையே மிரட்டிய போலீசாரின் இன்றைய செயலை கண்டுபொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.